சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கியுள்ள ஊர்களிலேயே தேர்வு எழுதலாம்!!!

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், தாங்கள் தங்கியுள்ள ஊர்களிலேயே பொதுத்தேர்வுகளை எழுதலாம் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகள், ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. 3000 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேர்வு, மாணவர்களின் வசதிக்காக 15 ஆயிரம் மையங்களில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் தாங்கள் தங்கியுள்ள ஊர்களிலேயே தேர்வை எழுதலாம் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு சென்ற மாணவர்கள், அந்தந்த பகுதிகளிலேயே தேர்வை எழுத வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

Exit mobile version