சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வை 11 லட்சத்து ஆயிரத்து 664 மாணவர்களும், 7 லட்சத்து 88 ஆயிரத்து 195 மாணவிகள் உட்பட 18 லட்சத்து 89 ஆயிரத்து 878 பேர் எழுதுகின்றனர். மார்ச் 20ம் தேதி வரை இத்தேர்வு நடைபெறுகிறது. இதேபோல், 12ம் வகுப்பு தேர்வை, 6 லட்சத்து 84 ஆயிரத்து 68 மாணவர்களும், 5 லட்சத்து 22 ஆயிரத்து 819 மாணவிகள் உட்பட 12 லட்சத்து 6 ஆயிரத்து 893 பேர் எழுதுகின்றனர். 12ம் வகுப்பு தேர்வு மார்ச் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு தொடங்கும் 20 நிமிடங்களுக்கு முன்பே, மாணவர்கள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version