சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தாண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான விடுபட்ட தேர்வுகள் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி பெற்றோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் தேர்வுகளை நடத்த இயலாது என தெரிவித்துள்ளதால், ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை நடைபெற இருந்த சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக கூறினார். கொரோனா பாதிப்பு குறைந்த பின் மீண்டும் 12ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்றும் துசார் மேத்தா தெரிவித்தார். இதேபோல் ICSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version