தமிழகம், ஆந்திரா உள்பட நாடு முழுவதும் 187 இடங்களில் வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமாஸ் உள்ளிட்ட 17 வங்கிகளில் மோசடி நடைபெற்றதாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் ரூ.7,200 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 187 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சுமார் 1000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நடப்பாண்டில் நடைபெற்ற மிகப்பெரிய சோதனையாக இது கருதப்படுகிறது.
வங்கி மோசடியில் ஈடுபட்ட நிறுவன இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.