தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், சி.பி.ஐ. வெள்ளிக் கிழமை முதல் விசாரணையை தொடங்குகிறது : சிபிஐ

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கை விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. காவல்துறை, ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட ஏற்கெனவே 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்தநிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உட்பட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், நாளை முதல் விசாரணை தொடங்கப்படவுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது. சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் விசாரணையை தொடங்குவார்கள் என்றும், சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் நாளை காலை சிறப்பு விமானத்தில் டெல்லியிலிருந்து மதுரை வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி தரப்பில் விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version