`என்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்’ – முன்னாள் சி.பி.ஐ.இயக்குநர் தற்கொலை!

முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் அஷ்வனி குமார் சிம்லாவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

முன்னாள் சி.பி.ஐ. இயக்குநராகவும், மணிப்பூர், நாகாலாந்து கவர்னராகவும் இருந்தவர் அஷ்வினி குமார். இவர், சிம்லாவில் உள்ள தனது வீட்டில், மனைவி, மகன், மருமகளுடன் வாழ்ந்துவந்தார். நேற்று, மதிய உணவுக்கு பிறகு, மால், கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியவர், இரவு 7.10 மணி அளவில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர், அஷ்வின்குமார், தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், `நான் என்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருங்கள். எனது ஆத்மா புதிய பயணத்தை தொடங்குகிறது” என்று எழுதியுள்ளார். மேலும் அவர் நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டிப்பதாகவும் கூறப்படுகிறது.

காமன்வெல்த் ஊழல் விசாரணை, சொராபூதின் என்கவுன்டர் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் விசாரணை நடத்தியவர் அஷ்வனிகுமார் என்பது குறிபிடத்தக்கது.

 

 

Exit mobile version