டெல்லியில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 14 வது கூட்டம்

தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177 புள்ளி 25 டி.எம்.சி., காவிரி நீர் வழங்க, கர்நாடக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், ஆணையத்திற்கு தேவையான தகவல்களை, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த குழுவில், தமிழகத்தின் சார்பில், காவிரி தொழில்நுட்பபிரிவு தலைவர் சுப்பிரமணியன், திருச்சி மண்டல நீர் வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் 14வது கூட்டம், டெல்லியில் இன்று நடைபெற உள்ள நிலையில், இதில், பங்கேற்பதற்காக, தமிழக அதிகாரிகள், டெல்லி சென்றுள்ளனர்.

Exit mobile version