காவிரி நீர் மேலாண்மை ஆணையம் டிசம்பர் 3-ம் தேதி கூடுகிறது

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நதி நீரை பங்கீடு செய்வதற்காக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்று மத்திய அரசு கடந்த மே மாதம் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. இதன் தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டார். கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இதில் தமிழகத்திற்கு 31 டிஎம்சி நீர் திறந்துவிட கர்நாடகத்திற்கு ஆணையம் உத்தரவிட்டது. இதன் பின்னர் இரண்டாவது கூட்டம் ஜூலை 19-ம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில் டிசம்பர் 3-ம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும் என ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார். மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version