கர்நாடகா அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது

கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகள் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழகத்துக்கு வரும் காவிரி நீரின் அளவு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒக்கனேக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது.

மேட்டூர் அணைக்கு தற்போது விநாடிக்கு 1500 கனஅடி காவிரி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு தொடர்வதால் முன்னெச்சரிக்கையாக ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version