காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணைகுழுவினர், பவானிசாகர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மூலம் அமைக்கப்பட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் வழிகாட்டுதலின்படி துணைக்குழு அமைக்கப்பட்டது. காவிரி நீர் பாயும் மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்கள், நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றத்தை கணக்கிடுவதற்காக அமைக்கப்பட்ட இந்த துணைக்குழுவினர், கடந்த 4 மற்றும் 5-ந் தேதிகளில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் ஆய்வு செய்தனர். நேற்று மேட்டூர் அணையை ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று பவானிசாகர் அணைக்கு வந்த காவிரி ஒழுங்காற்று துணைக்குழுவினர் பவானிசாகர் அணையின் மேல்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர். ஜூலை 31-ந் தேதி ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.