காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் 9 புள்ளி 19 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை மாதத்திற்கு 31 புள்ளி 24 டி.எம்.சி. தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் இன்று நடைபெறவிருந்தது. இந்த கூட்டம் திடீரென, வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. வருகிற 25ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளது.