இந்தியாவிலேயே முதல் முறையாக பெருந்தமணியில் ஏற்பட்ட வீக்கத்திற்கு அறுவைசிகிச்சையின்றி, அதிநவீன முறையில் சிகிச்சை அளித்து சென்னை காவேரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரபாகர ராவ் என்பவருக்கு அடிவயிற்றில் “அயார்ட்ட” எனப்படும் பெருந்தமணி ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டு இருந்தது. கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் பெருந்தமணி சிகிச்சைப் பிரிவினர், அறுவை சிகிச்சை இல்லாமல், “அனகோண்டா ஸ்டெண்ட்” என்ற அதிநவீன முறையை பயன்படுத்தி சிகிச்சை அளித்தனர். இச்சிகிச்சை இந்தியாவிலேயே இங்குதான் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன சிகிச்சையால் பெரும் செலவு குறைவதோடு, நோயாளி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.