டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆலோசனை

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் தலைநகர் டெல்லியில்  அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. தமிழக பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகரன், திருச்சி மண்டல பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் இதில் பங்கேற்றுள்ளனர். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு தர வேண்டிய 9 புள்ளி 2 டிஎம்சி மற்றும் 31 புள்ளி 2 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விடாத நிலையில் இன்றைய கூட்டத்தில், இந்த பிரச்சனையை தமிழக அதிகாரிகள் எழுப்புகிறார்கள். இதேபோல், ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய 45 புள்ளி 93 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவை தமிழகம் வலியுறுத்தி வருகிறது. 

Exit mobile version