வரும் 28ம் தேதி காவிரி ஆணையக்குழுக் கூட்டம்

டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுக்கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதேபோல காவிரி ஆணையக்குழு கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக மற்றும் அதுகுறித்த பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வதற்காக கடந்த ஆண்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களை சேர்ந்த 9 பிரதிநிதிகளை கொண்ட இரண்டு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுக்களின் கூட்டம் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். கர்நாடகாவில் மழையளவு, காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளிட்டவை குறித்து ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி ஆணைய கூட்டத்தில் தண்ணீர் தேவை, கர்நாடகா காவிரியில் திறந்து விட வேண்டிய நீரின் அளவு உள்ளிட்டவை குறித்து தமிழகம் தனது கோரிக்கை முன்வைக்கும்.

Exit mobile version