காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி, கொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை அடுத்து நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக முக்கொம்பு சுற்றுலா மையத்தில் இருந்து கொள்ளிடம் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது.

திருச்சி முக்கொம்புவில் நீர்வரத்து அதிகரித்து மேலணையில் இருந்து 40ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்படுவதால் திருச்சி முக்கொம்பு அணை நிரம்பி வருகிறது.

எனவே, காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்று பகுதிக்குச் செல்லவேண்டாம் என்றும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவேண்டாம் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னெச்சரிக்கை கருதி முக்கொம்பு சுற்றுலா மையத்தில் இருந்து முக்கொம்பு மேலணை வழியாக கொள்ளிடம் செல்லும் பகுதி மூடப்பட்டுள்ளது. கிளைவாய்க்கால்களில் கூடுதல் தண்ணீர் திறந்துவிடும் பட்சத்தில் வெள்ளபாதிப்பு இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version