கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதிக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டது. இது தொடர்பான செயல் திட்ட வரைவு அறிக்கைக்கான ஒப்புதலை மத்திய நீர்வளத்துறை ஆணையம் சில நாட்களுக்கு முன் வழங்கியது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.