மாட்டுப் பொங்கலை முன்னிட்டு விருத்தாச்சலத்தில் கால்நடைகளுக்கான அலங்காரப் பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில், மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கால்நடைகளுக்கான கயிறுகள், மணிகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களின் விற்பனை களைக் கட்டியது. மாடுகளுக்கான தலை கயிறு, கை கயிறு, மூக்கணாங்கயிறு, நெற்றிக் கயிறு உள்ளிட்ட பல வகையான கயிறுகள் மற்றும் சலங்கை, மணிகள் போன்ற அலங்கார பொருட்களை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.