இந்திய அணி பங்கேற்றுள்ள முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியில், சதம் விளாசி, விராத் கோலி அசத்தியுள்ளார்.
இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான பகல் இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி இன்று தொடங்கியது. ரஹானே 51 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அபாரமாக விளையாடிய கேப்டன் கோலி சதம் அடித்து அசத்தினார்.
பகல் இரவு டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது. கோலியின் சதத்தால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.