திமுக ஆட்சிக்கு வந்தால் ஜாதிக்கலவரங்கள் தலைவிரித்தாடும் : அதிமுக வேட்பாளர் சின்னப்பன்

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜாதி மதக் கலவரங்கள் தலைவிரித்தாடும் என, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் தெரிவித்துள்ளார்.

தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, அவர் தனது பிரசாரத்தினை தொடங்கினார். பின்னர் திறந்தவேனில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர், திமுக ஆட்சிக்கு வந்தால், ஜாதி மத கலவரம், நில மோசடி உள்ளிட்டவை தலைவிரித்தாடும் என தெரிவித்தார்.

Exit mobile version