தமிழகத்தில் சாதி மற்றும் மத கலவரங்கள் ஒடுக்கப்பட்டுள்ளது -துணை முதலமைச்சர்

சாதி மற்றும் மத கலவரங்களை ஒடுக்கி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சிவகங்கை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாகராஜன் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், திமுகவின் அடிப்படை தேவையே கட்டப் பஞ்சாயத்து தான் என்று குற்றம்சாட்டினார். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு உள்ள மாநிலம் தமிழகம் தான் என்று கூறிய அவர், சாதி மற்றும் மத கலவரங்களை ஒடுக்கி சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். முன்னதாக மானாமதுரை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து பேசிய சிவகங்கை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நன்றி தெரிவித்தார்.

Exit mobile version