பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டியால் இந்திய பொருளாதாரம் முடங்கி உள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியாவின் எதிர்காலம்’ என்ற தலைப்பில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேசினார். அதில், 2012 முதல் 2016 வரை இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்தது. பணமதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டியும் இந்திய பொருளாதார வளர்ச்சியை முடக்கி போட்டுவிட்டதாக குற்றம்சாட்டினார்.
சர்வதேச பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பது வியப்பாக உள்ளது என்று கூறியவர், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றில் இருந்து இந்தியா மீண்டு வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு பாதிப்பை உருவாக்கி உள்ளது என்று தெரிவித்தார்.
இந்தியாவில், அதிகாரம் முழுவதும் மத்திய அரசிடம் குவிந்திருப்பதும், பிரச்சனைக்கு காரணம், சுமையை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் போது தான் இந்தியா சீராக இயங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.