சமூக வலைதளங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் உள்ளிட்டவற்றில் தனிமனித அவதூறுகள் பரப்பப்படுவதாகவும், இதனால் குற்றச் சம்பவங்கள் நடைபெற அவை அடிப்படையாக இருப்பதால், இதனை முறைப்படுத்த சமூக வலைத்தளங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு உயர்நீதிமன்றங்களில் மனுக்கள் விசாரிக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டியது. இதனைத் தொடர்ந்து தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், உயர் நீதிமன்றத்தை அணுக அனுமதி அளிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்தது.