திமுக எம்.பி. கனிமொழி மீது வழக்குப்பதிவு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி. நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அதிக நேரம் பிரசாரம் மேற்கொண்டதாக, கனிமொழி மீது மாவட்ட தேர்தல் அலுவலர் மாரிமுத்து புகார் அளித்தார். தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் திமுக எம்.பி. கனிமொழி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version