போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ரமேஷ் என்பவர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் அவர்கள் மீதான அபராத தொகையை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டுமென்று வழக்கு தொடர்ந்திருந்தார். செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் செல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்த கேள்விக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.