இரும்புக்கடை இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வழக்கு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இரும்புக்கடை சேதப்படுத்தப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லடத்தை அருகே கணபதி என்பவருக்கு சொந்தமான இரும்புக்கடையை, இடப்பிரச்சினை காரணமாக ஜேசிபி வைத்து சிலர் இடித்து தரை மட்டம் ஆக்கினார்கள். கடையில் இருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் நில உரிமையாளர் உள்ளிட்டோர் மீது பல்லடம் போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கணபதியின் தாய் ராணி உள்ளிட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

Exit mobile version