நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று முதல் விசாரணையை தொடங்கினர்
இந்த வழக்கின் முக்கிய நபரான ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கு குழந்தைகள் விற்பனையில் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் வழக்கின் தீவிரம் கருதி சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி டி.கே ராஜேந்திரன் உத்தரவிட்டு இருந்தார். இதனையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் இன்று முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.