கொடநாடு விவகாரம் தொடர்பாக அவதூறு வீடியோ வெளியிட்ட செய்தியாளர் மேத்யூஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2017-ல் கொடநாடு எஸ்டேட் காவலாளிகள் கொலை விவகாரம் குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் அவதூறு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த அவதூறு வீடியோ விவகாரத்தில் மேத்யூஸ் மீது தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆவணப்படத்தில் பேட்டியளித்த சயன், மனோஜ் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.