வாக்கு சேகரிப்பின் போது தகராறில் ஈடுபட்டதாக கருணாநிதியின் மகள் செல்வி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து, கருணாநிதியின் மகள் செல்வி, சென்னை சூளைமேடு பகுதியில் வாக்கு செகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தெகலான் பாகவிக்கு ஆதரவாக அசினா பானு மற்றும் அவரது சகோதரி ரிஷ்வானா பேகமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதைப் பார்த்த செல்வி, அசினாபானு மற்றும் ரிஷ்வானா பேகத்திற்கு எதிராக அவதூறாக பேசியுள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அசினா பானு, காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் செல்வி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.