பொதுமக்களுக்கு இடையூறு செய்து போராட்டம் நடத்திய வழக்கில், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 7 பேர், சிறப்பு நீதிமன்றத்தில் 26-ம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளும், 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை அண்ணா சாலையில் பேரணி நடத்தினர். சிம்சன் பகுதி அருகே , காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை தாண்டிச் சென்றதால், பல பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது..பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்..
இந்த நிலையில், மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஸ்டாலின், திருநாவுக்கரசர், ஜவாஹிருல்லா, திருமாவளவன் உட்பட 7 பேர் மீது, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வழக்குப் பதிவு செய்யப்பட்ட 7 பேரும், வரும் 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.