“Zomato" நிறுவனம் டெலிவரி செய்த சிக்கன் மசாலாவுக்கு எதிராக வழக்கு

சமீப காலங்களில் இந்திய மக்களிடையே ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.ஆனால் சில சமயங்களில் இவர்களின் செயல்பாடுகள் குறை சொல்லும் அளவிலும் இருக்கின்றன.

புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முக் தேஷ்முக் என்பவர் Zomato செயலியில் பன்னீர் மசாலா ஆர்டர் செய்துள்ளார். உணவும் பிக்அப் ஆகி சிறிது நேரத்தில் அவரின் கைகளுக்கு வந்தது. ஆசையோடு சாப்பிட திறந்தவருக்கு பேரதிர்ச்சி தான் மிஞ்சியது. உள்ளே பன்னீர் மசாலாவிற்கு பதிலாக சிக்கன் மசாலா அனுப்பப்பட்டிருந்தது.

முதலில் சிக்கன் மசாலாவும் பார்க்க பன்னீர் மசாலா போலவே இருந்ததால் சாப்பிட ஆரம்பித்துள்ளார். அதன்பின் தான் அது பன்னீர் இல்லை என தெரிய வந்தது.

உடனே அவர் புனே நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர, “Zomato” நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரமும், நுகர்வோர் மன உளைச்சலுக்கு ரூ.5 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.55 ஆயிரத்தை 45 நாட்களுக்குள் அபராதம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதற்கு Zomato நிறுவனம், இது உணவு நிறுவனத்தின் தவறுதான். நாங்கள் உணவை வாங்கி டெலிவரிதான் செய்கிறோம் என விளக்கமளித்துள்ளது.

Exit mobile version