நடிகர் ஆர்யா மீது ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண் சிபிசிஐடியிடம் புகார்? என்ன விசயம்ன்னு படிங்க…

நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி பெண் கொடுத்த ரூ.70 லட்சம் மோசடி புகாரின் நிலை குறித்து சிபிசிஐடி விளக்கமளிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவருக்கு எதிராக ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் தரப்பில், கடந்த மார்ச் மாதம் சிபிசிஐடி’யிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனடிப்படையில் புகார் மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடி’க்கு உத்தரவிடக்கோரி விட்ஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன்னுடன் பழகிய நடிகர் ஆர்யா, ரூ.70 லட்சத்திற்கும் மேல் பணம் பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யாவிற்கு திருமணம் என்று தெரிய வந்தபோதே பணத்தை திரும்ப கேட்ட போது, தன்னிடம் வாங்கிய பணம் முழுவதையும் செலுத்தி விடுவதாக மணப்பெண்னும் நடிகையுமான சாயிஷாவின் பெற்றோர் உறுதியளித்தனர், அதனால் மட்டுமே திருமணத்துக்கு சம்மதித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது,

 

அதன் பின், 6 மாதத்தில் நடிகை சாயிஷாவிடம் இருந்து விவாகரத்து பெற்று தன்னை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா மீண்டும் பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை-3, இரண்டகம் என்ற மலையாள படம் வெளியானால் தனக்கு வர வேண்டிய பணம் கிடைக்காமல் போகும் என வாதிட்டார்.

மேலும், சிபிசிஐடியிடம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

புகார் மீதான தற்போதைய நிலை குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி விசாரணையை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Exit mobile version