ஹாங்காங் நகரில் நடைப்பெற்ற ஓவிய ஏலத்தில் சிறுமியின் கார்ட்டூன் ஒவியத்திற்கு 177 கோடி ரூபாய் பெற்று சாதனை படைத்துள்ளது.
சீனா நாட்டின் ஹாங்காங் நகரில் ஓவியங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் ஜப்பான் ஓவியக்கலைஞர் யோஷிடோமா நரா என்பரின் ஓவியமும் இடம் பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஓவியங்கள் இடம் பெற்ற நிலையில் இவரின் ஓவியம் அனைவரின் பார்வையும் கவர்ந்தது.
“Knife Behind Back” என்ற பெயரில் வைக்கப்பட்ட இந்த ஓவியத்தில், சிறுமியின் உணர்ச்சியை கார்ட்டூன் வடிவில் யோஷிடோமா நரா வெளிப்படுத்தியுள்ளார். அந்த ஓவியத்தில் சிறுமியின் முகம் கோபத்துடனும் ,ஒரு கையை மட்டும் வெளிப்படுத்தி, மற்றொரு கையில் என்ன இருக்கிறது? என்ற ஆர்வத்தை பார்வையாளர்களிடம் தூண்டி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து ஏலம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே 25 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 177 கோடிக்கு ஏலம் போனது. மேலும் நியூயார்க்கில் அடுத்த மாதம் நடைப்பெற உள்ள ஓவிய ஏலத்தில் யோஷிடோமா நராவின் ஓவியங்கள் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.