மீனாட்சியம்மன் கோவில் இலவச லட்டை பாதுகாப்பாக எடுத்து செல்ல அட்டைப்பெட்டிகள்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வழங்கப்பட்டு வரும் இலவச லட்டு பிரசாதத்தைப் பாதுகாப்பாக எடுத்து செல்ல அட்டைப்பெட்டிகள் விற்பனையைக் கோவில் நிர்வாகம் தொடங்கியுள்ளது…

தொடர் விடுமுறையையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளை, பக்தர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக அட்டைப் பெட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஐந்து முறுக்குகள் கொண்ட அட்டைப்பெட்டி 55 ரூபாய்க்கும், 10 லட்டுகள் கொண்ட அட்டைப்பெட்டி 110 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.

Exit mobile version