உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை நான்காவது முறையாக நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளார்.
நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் 2013ம் ஆண்டு இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை வென்று முதல்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 2014 மற்றும் 2016லும் செர்ஜி கர்ஜாகின்னை தோற்கடித்து உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்நிலையில் லண்டனில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்காவின் பபியானோ கருணாவை எதிர்த்து கார்ல்சன் போட்டியிட்டார்.
1972ல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பாபி பிஷர் என்ற அமெரிக்கர் வென்றார். அவருக்கு பிறகு, இந்த பட்டத்தை வெல்லும் அமெரிக்கர் என்ற பெருமையை அடைய நினைத்த கருணாவின் கனவை தகர்த்து, சாம்பியன்ஷிப் பட்டத்தை கார்ல்சன் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இதன்மூலம் 4வது முறையாக உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை அவர் வென்றுள்ளார்.