நூதன முறையில் கார் கண்ணாடியை உடைத்து நகை திருட்டு

நூதன முறையில் கார் கண்ணாடியை உடைத்து ஏழரை பவுன் நகை திருடிய டிப்டாப் திருடர்கள் சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோயம்புத்தூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி அவரது மகன் சிவா மற்றும் மகள் சிவானி ஆகியோர் கடந்த ஞாயிறன்று நாமக்கல்லில் தனியார் ஓட்டலில் நடைபெற்ற விழாவுக்கு தங்களுடைய காரில் வந்துள்ளனர். ஓட்டலுக்கு அருகில் நிறுத்திவைத்திருந்த காரில் தமிழ்ச்செல்வி தன்னுடைய கைப்பையில் ஏழரை பவுன் தங்க நகைகளை வைத்து விட்டுச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த டிப்டாப் திருடர்கள் இருவர் காரில் உள்ள கைப்பையை நோட்டமிட்டுள்ளனர். காரைச் சுற்றி வந்த ஒருவன் தன்னுடைய கையில் வைத்திருந்த வில் போன்ற ஒன்றினால் காரின் கண்ணாடியை உடைத்துள்ளான். பின்பு வந்த மற்றொருவன் காரின் கண்ணாடியை முழுவதுமாக உடைத்து காரில் இருந்த கைப்பையை எடுத்துச் சென்றுள்ளான். இந்தக் காட்சிகள் அருகிலுள்ள கடை ஒன்றின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.

பின்னர் விழா முடிந்து தன்னுடைய காருக்கு வந்த தமிழ்ச்செல்வி கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து நாமக்கல் காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. திருடர்கள் ஊக்கு, ரப்பர் பேண்ட், சாக்லேட் தாள் மற்றும்இருசக்கரவாகனங்களுக்குப்பயன்படுத்தப்படும் பால்ரஸ் ஆகியவற்றைக் கொண்டு வில் போன்ற ஒன்றைச் செய்து காரின் கண்ணாடியைத்தாக்கியுள்ளனர். கண்ணாடிகள் நொறுங்கியவுடன் காரில் இருந்த பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version