கோமத் என்பவர் நேற்று இரவு மதுபோதையில் கீழ்ப்பாக்கம் கெங்கி ரெட்டி சப்வே அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது காவல்துறையினர் வாகன சோதனை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறி, இருசக்கர வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது வாக்குவாதம் செய்த கோமத், மருந்துக்கடைக்கு சென்று பூச்சி மருந்தை வாங்கி குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக கோமத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.