திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஓடும் காரில் தீ பற்றியதால் ஓட்டுநர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
மணப்பாறையை அடுத்த சித்தானந்தம் பிரிவு என்ற இடத்தில், திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென்று தீப்பற்றியது.
அதைக் கண்ட பொதுமக்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடங்கள் கார் பற்றி எரிந்தது. உள்ளே ஓட்டுநர் இருக்கையில் ஆள் இருந்தது தெரிய வந்தது.
இதை அடுத்து, மணப்பாறை தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால், அதற்குள் கார் மொத்தமும் எரிந்து, ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழந்த ஓட்டுநர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.