உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் விசாரணைக்காக இந்தியா வர முடியாது என்று வங்கி முறைகேடு வழக்கில் சிக்கியிருக்கும் மெகுல் சோக்சி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேசனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் நிரவ் மோடி, அவரது கூட்டாளியான மெகுல் சோக்சி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் தற்போது இந்தியாவில் இல்லாத காரணத்தால் கைது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.
இந்தநிலையில் மும்பை நீதிமன்றத்தில் மெகுல் சோக்சி தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் விசாரணைக்காக 41 மணிநேரம் பயணம் செய்து வர முடியாது என மெகுல் சோக்சி குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் காணொலி காட்சி மூலம் தான் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.