கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை 1300 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி தலைமையில் நடந்த தென் பிராந்திய போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு உயர் அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவிற்கான தென்னிந்திய பிராந்திய ஒருங்கிணைப்பு கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, தெலுங்கானா, கர்நாடகம் மற்றும் அந்தமான் நிக்கோபார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி
கலந்துகொண்டார்.
அதில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்தும் வழிகளை அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டும். இளம் தலைமுறையினரை இச்சமுதாய சீர்கேட்டிலிருந்து காப்பாற்ற வேண்டியதன் பொறுப்பினை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்று திரிபாதி கோரிக்கை வைத்தார்.
கூட்டத்தில் போதைப்பொருள் உபயோகம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. கஞ்சா உபயோகிப்பவர்கள் மட்டுமல்ல, நாட்டில் மற்ற போதைப்பொருளை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்து வருவதை ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
* கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை 1300 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
* கடந்த 2014-ம் ஆண்டுக்கும் 2019-ம் ஆண்டுக்கும் இடையே 6.7 லட்சமாக இருந்த கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை தற்போது 3 கோடியாக அதிகரித்துள்ளது.
* போதைப்பொருள் வகைகளான ஹெராயின் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது ஹெராயின் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2.90 லட்சத்திலிருந்து 19 லட்சமாக கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது.
* கொகைன் என்கிற போதைப்பொருளை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தில் இருந்து 2.3 கோடியாக கிட்டத்தட்ட 1000 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டு காலத்தில் கஞ்சாவுக்கு இணையாக கொகைன் பயன்பாடும் கிட்டத்தட்ட 1000 மடங்கு
அதிகரித்துள்ளது*
*கூட்டத்தில் எடுத்த முடிவுகள் இவற்றைத் தடுப்பதற்கு கூட்டு முயற்சியுடன் கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பாக ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்*
விமானம் மூலம் கொண்டு வரப்படும் அஞ்சல்கள், கூரியர் சேவைகள் போன்றவற்றின் மூலமும் போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. இதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்
இதேபோன்று சந்தையில் செயற்கையாக உருவாக்கப்படும் போதை மருந்துகள் வரத்தும் அதிகரித்து நிரம்பி வழிகிறது. இவற்றை வியாபாரத்தில் நஷ்டமடைந்த மருந்து நிறுவனங்கள் தயாரிப்பது தெரியவந்துள்ளது
மது போதை ஒரு தலைமுறையையே நாசம் செய்தது. தற்போது மது போதையை விடுத்து வேறு வகையான போதை வஸ்துக்களை மாணவர்கள், இளம் பருவத்தினர் நாடிச் செல்கின்றனர். அதில் முதலிடம் வகிப்பது கஞ்சா. அடுத்து போதை மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள், இருமல் மருந்துகள், கொகைன், ஹெராயின் என பல வகைகள் உள்ளன
காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் போதைப்பொருள் விற்பனை செய்துவரும் கும்பலும் அதற்கு தகுந்தார் போல மாறி வருகின்றது. இணையதளங்கள் மூலமாகவும் ஏராளமான போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. அதனை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவற்றையும் முடக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள்
மட்டத்தில் டிஜிபி ஜேகே திரிபாதி தெரிவித்துள்ளார். ஏற்கனவே மாநில போதை கட்டுபாட்டு துறையும் மத்திய கட்டுபாட்டு துறையும் தீவிர கண்காணிப்பில் ஏராளமான போதை பொருட்களையும் அதை கடத்தக்கூடிய குற்றவாளிகளையும் கைது
செய்வதையும் சுட்டிக்காட்டினார்…