இலங்கையில் அதிபர் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் அறிவிப்பு

இலங்கையில் தேசிய மக்கள் சக்தியின் அதிபர் வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகள் தமது அதிபர் வேட்பாளர்களை தற்போது அறிவித்து வருகின்றன. இதனை தொடர்ந்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் அதிபர் தேர்தலில் தன்னை வேட்பாளராக தேர்வு செய்தததற்கு, தேசிய மக்கள் சக்திக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும், மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் சிதைக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version