அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வேட்புமனுத்தாக்கல்

சென்னை பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் ஆர்.எஸ்.ராஜேஷ் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சென்னை பெரம்பூர் சர்மா நகரில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில், அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அமைச்சர் ஜெயகுமார், அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன், தே.மு.தி.க வட சென்னை தொகுதி வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர் தனபால் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.

Exit mobile version