கடனை செலுத்தாத 31 நிதி நிறுவனங்களின் பதிவு உரிமத்தை ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் வரையிலான கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை என ரிசர்வ் வங்கியானது குறிப்பிட்ட நிதி நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டியது. இதனையடுத்து 10 முதல் 15 சதவீத முதற்கட்ட தொகையை திருப்பி செலுத்தாத வங்கி அல்லாத 31 நிதி நிறுவனங்களில் பதிவு உரிமத்தை ரத்து செய்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதில் அதிக பட்சமாக 27 நிதி நிறுவனங்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவையாகும். அதிகரித்து வரும் வட்டி விகிதம் காரணமாகவும், இந்த நிதி நிறுவனங்கள் நீண்ட கால சொத்துக்களுக்காக குறுகிய காலத்தில் கடன் வாங்குவதால் எழும் பிரச்சனைகளாலும், மற்றும் நிதி நெருக்கடி காரணமாகவும், இந்திய பதிவு செய்தல் சட்டம் பிரிவு 45 – IA ன் படி அந்த நிதி நிறுவனங்களின் பதிவை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.