அரியானாவில் 4, 750 கோடி ரூபாய் பயிர்க்கடன் வட்டி மற்றும் அபராத தொகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
அரியானாவில் விரைவில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து விவசாயிகள் வாங்கிய, பயிர்க்கடன்களுக்கான வட்டி மற்றும் அபராத தொகை தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், விவசாயிகள் நலன் கருதி பயிர் கடன்களுக்கான வட்டி மற்றும் அபராத தொகை 4 ஆயிரத்து 750 கோடி ரூபாய் ரத்து செய்யப்படுவதாகவும், இந்த தொகையை 5 ஆயிரம் கோடி வரை உயர்த்த ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் வங்கிகளில் கடன்பெற்ற 10 லட்சம் விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.