பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக் கட்டணம் ரத்து

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக் கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பொருளாதார பின்னணியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்விக் கட்டணத்தை ரத்து தமிழக அரசு செய்துள்ளது. ஏற்கனவே, தமிழ்வழி கல்விக்கு கட்டணம் இல்லாமல் இருந்துவந்த நிலையில், தற்போது ஆங்கிலவழி கல்விக்கும் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version