தமாகவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க மறுத்த உத்தரவு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க மறுத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கக்கோரி அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். இதனை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

இதையத்து தங்களுடைய கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க மறுத்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்த நீதிபதி, 8 வாரத்தில் மறுபரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.

Exit mobile version