முழுவதும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய உலகின் முதல் விமானம் கனடா நாட்டில் அறிமுகமாகி உள்ளது,
சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் பெட்ரோலிய எரிபொருட்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனால் டீசல், பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை பல்வேறு உலக நாடுகளும் ஊக்குவித்துவருகின்றன.
இருசக்கர வாகனங்கள், கார்கள், டிரக்குகள் போன்றவற்றில் ஏற்கனவே மின்சார வாகனங்கள் சந்தைக்கு வந்துவிட்டாலும், முழுவதும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய விமானங்கள் பெரும் கனவாகவே இருந்து வந்தன. இந்தக் கனவை நினைவாக்கி உள்ளது கனடாவைச் சேர்ந்த ஹார்பர் ஏர் சீ பிளேன்ஸ் நிறுவனம்.
இந்நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எஞ்சின் தயாரிப்பு நிறுவனமான மேக்னிஎக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உலகின் முதல் மின்சார விமானத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. நீரிலும் வானத்திலும் பயணிக்கக் கூடிய இந்த விமானத்தில் விமானி உட்பட 6 பேர் பயணிக்க முடியும். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்பட திட்டங்கள் உள்ளன. இ-பிளேன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த மின்சார கடல் விமானத்தின் சோதனை ஓட்டம் கடந்த 10ஆம் தேதி கனடாவில் நடைபெற்றது.