கனடா மற்றும் பிரிட்டன் பயணிகளை வெளியேற்ற முடிவு – டொனால்டு டிரம்ப்

கொரோனா அச்சுறுத்தலால் அமெரிக்க கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு கப்பல்களில் சிக்கியிருக்கும், கனடா மற்றும் பிரிட்டனை சேர்ந்த பயணிகளை வெளியேற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.  அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா துறைமுகம் நோக்கி வந்த இரண்டு கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கப்பல்களிலும் கொரோனா தொற்று ஏற்பட்டு 4 பேர் பலியாகி உள்ளனர். 9 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 200க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களுக்கு மருத்துவக் குழுவினரை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இந்த நிலையில் கப்பல்களில் சிக்கியுள்ள கனடா மற்றும் பிரிட்டனை சேர்ந்தவர்களை வெளியேற்றி, அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Exit mobile version