தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ள சிவகார்த்திகேயன் கனா திரைப்படத்தை தொடர்ந்து இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் “ஹீரோ” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாகவும், நடிகர் அர்ஜூன் வில்லனாகவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல இடங்களில் நடைபெற்று வருகின்றது. அதில் சில காட்சிகள் மின்சார ரயில்களில் நடைபெறுவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் மித்ரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் ஆகியோருடன் மின்சார ரயிலில் படியில் தொங்கியவாறு அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதனால் பல்வேறு தரப்பிலிருந்தும் சிவகார்த்திகேயனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதில் உச்சக்கட்டமாக ரயில்வே மேலாளர் ரயில்வே போலீசாருக்கு அந்த புகைப்படத்தை டேக் செய்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த படம் இயக்குநர் மித்ரனின் டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பலதரப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள சிவகார்த்திகேயன் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது நியாயமா? சொல்லுங்கள்.