மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதா? கிரேடு வழங்கலாமா? என அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் விதம், பள்ளிகள் திறப்பு ஆகியவை குறித்து, அதிகாரிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை செயலளார் தீரஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்தும், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கலாமா அல்லது கிரேடு வழங்குவதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பள்ளிகள் திறப்பு குறித்தும், ஆன்லைன் கல்விக்கான வழிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் மற்றும் வருகை பதிவு அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version