தந்தை பெயரைக் காப்பாற்றுவாரா ஸ்டாலின் ???

திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிச்சாச்சு. இனி ஆளாளுக்கு நாங்கள் வெற்றி பெறுவோம், நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என சவால் விடத் தொடங்கிவிடுவார்கள்.

ஆனால் இந்த தேர்தல் உண்மையில் பெரும் சவாலாக அமைந்திருப்பதென்னவொ பாவம் ஸ்டாலினுக்குத்தான். தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டதிலிருந்து அதாவது 1971 முதல்  7,ஆக 2018 வரை திருவாரூர் தொகுதியில் நடத்தப்பட்ட 11 தேர்தல்களில் திராவிட முன்னேற்ற கழகம் செலுத்திய ஆதிக்கம் தமிழக அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.

இப்போது கருணாநிதி மறைவுக்குப் பிறகு திருவாருர் தொகுதியில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த தேர்தலில் அவசியம் வென்றாக வேண்டிய சூழலில் நிற்கிறார் ஸ்டாலின். ஒருவேளை வென்றாலும் மக்கள் இந்த அனுதாப வெற்றியைப் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை. ஆனால் தோற்றால் தன் பலவீனம் வெளிப்பட்டு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் திமுக மண்ணைக் கவ்வ வேண்டியதுதான்.

வென்றாலும் சிறப்பில்லை. தோற்றுவிட்டால் அதோகதி இது ஒன்று.

அடுத்து, தவமாய் தவமிருந்து தலைவர் பதவிக்கு தான் வந்த பிறகு சந்திக்கப்போகும் முதல் தேர்தல் என்பதால் வென்றே ஆகவேண்டும். ஒருவேளை, தோற்றுவிட்டால் வெறும் உறுப்பினர்களுக்கு தலைவராயிருக்கும் தரமற்றவராக காட்சியளிப்பார்.

வெற்றி பெற்றே ஆகவேண்டும். பாஸா ? ஃபெயிலா ? எல்லாம் இல்லை. இங்கு பாஸாகித் தீரவேண்டிய கட்டாயம். ஒருவேளை ஃபெயிலானால் திமுக தலைவர் இனி இவர் இல்லை என அரசியல் வட்டம் பேசிக்கொள்ளக் கூடும் இது இரண்டு.

அப்பனுக்குத் தப்பாத பிள்ளை என்றொரு பெயரெடுக்க வேண்டிய கட்டாயம் எந்தெந்தெ பிள்ளைக்கெல்லாம் வருகிறதோ அந்த பிள்ளைதான் பாவத்திலும் பாவம் என்றொரு நாட்டார் சொலவடை உண்டு. இப்போது ஸ்டாலினுக்கும் இதே நிலைமைதான்.

அப்பா ஆண்டு வந்த அரசியல் கோட்டையை அடுத்தவர் கைகளில் விட்டுவிட்டால் அப்பனுக்கு தப்பாத பிள்ளை என்று பெயரெடுப்பதிலும் பேரிடி விழும் என்பதில் ஐயமில்லை இது மூன்று.

எல்லாவற்றுக்கும் மேலாக இவர்கள் ஜெயிக்கவேண்டுமென்றால் யாராவது ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும். தந்தை இருந்த இடத்தை இட்டுநிரப்ப வேண்டியதால் அதற்கிணையாக ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும். அதேசமயம் வேட்பாளரைத் தன் குடும்பத்திலிருந்து இறக்கினால் குடும்ப அரசியலெனும் கொடும் விஷத்தின் 3ம் தலைமுறை முளைவிடுகிறது என்று மக்கள் புரிந்துகொண்டு விடுவார்கள்.

அப்படியென்றால் குடும்ப அரசியல் அல்லாமல் ஒரு வேட்பாளரை நிறுத்தவேண்டும். நேர்காணல் வைத்து ஒரு திமுக தொண்டனை நிறுத்தும் முட்டாள்தனத்தை ஸ்டாலின் செய்யக்கூடாது. ஆனால் திமுக ஜனநாயக அமைப்பு என்பதால் நேர்காணல் வைப்போமென்று ஒரு கண்துடைப்பு ஆட்டம் ஆடும். ஆனால் ஆர்.கே நகர் தேர்தலில் செய்த அதே தவறை திருவாரூர் தேர்தலில் செய்யமாட்டரகள் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அப்படியென்றால் மக்கள் நன்கறிந்த முகமாகவும் இருக்கவேண்டும், அதேசமயம் குடும்ப உறுப்பினராகவும் இருக்கக்கூடாது இது நான்கு.

அடக் கடவுளே! இந்தப் புள்ளைக்கா இப்படி ஒரு சோதனை ஏற்கனவே துண்டுச்சீட்டுகள் கூட துணைபுரிவதில்லை.இன்னும் கொஞ்ச நாட்களில் தொண்டர்கூட்டமும் துணைபுரியாது. என்னசெய்யப்போகிறாரோ? இனி அப்பா பேர கெட்டுபோகாம பாத்துக்கனும்னா ஸ்டாலின் ஃப்ரிட்ஜ் ல வெச்சுத்தான் பாத்துக்கனும்.

Exit mobile version